கள்ளக்குறிச்சியில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- கள்ளக்குறிச்சியில் நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி தமிழ்நாடு கிராம மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநில பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தலைவர் கொளஞ்சி வேலு கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டை அமல்படுத்த வேண்டும்.
தூய்மை காவலரின் ஊதியத்தை நேரடியாக ஊராட்சியின் மூலம் வழங்குதல். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தூய்மை காவலர்களுக்கு ரூ.3600-லிருந்து ரூ.5 ஆயிரமாக சம்பளத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதில் மாநிலத் துணைத் தலைவர்கள் தங்கவேல், அந்தோணி தாஸ், ரமேஷ், சந்திரசேகர், மாநில இணை செயலாளர் கனி, பரமசிவன், முத்துசாமி, வேலு, சேதுராமன், சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.