உள்ளூர் செய்திகள்

மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி,

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மேம்பாட்டு பணிகள் எம்.பி.- கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-12 10:10 GMT   |   Update On 2023-03-12 10:10 GMT
  • மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை 2ம் இடத்தை பெற்றுள்ளது.
  • பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல் அருகிலுள்ள பிற மாவட்டத்தில் இருந்தும் பெண்கள் வந்து செல்கின்றனர். மாநில அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையில் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

பழமையான இந்த மருத்துவமனையில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பொது மக்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம், பழமையான கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடங்களை கட்டுவது குறித்து ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதன், மருத்துவமனை நிலைய அலுவலர் செல்வம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News