உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்கள்.

புரட்டாசி 4-வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

Published On 2022-10-15 08:13 GMT   |   Update On 2022-10-15 08:13 GMT
  • புரட்டாசி மாதத்தில் அனைத்து நாட்களும் வைணவ திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்:

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக உள்ளது. இதனால் இந்த மாதத்தில் அனைத்து நாட்களும் வைணவ திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக இந்த மாதத்தின் சனிக்கிழமை களில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.

அதன்படி புரட்டாசி மாதத்தில் 4வது சனிக்கிழ மையை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர்.

தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், மலையடிவாரம் சீனிவாசபெருமாள், ரெட்டி யார்சத்திரம் கோபிநாத சுவாமி கோவில், எம்.வி.எம்.நகர் தென்திருப்பதி வெங்கடா சலபதி கோவில், வடமதுரை சவுந்திர ராஜபெருமாள் கோவில், நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவி ல்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புரட்டாசி மாதத்தில் விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் பலர் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று தங்கள் வீடுகளில் உணவு சமைத்து விரதத்தை முடித்தனர்.

Tags:    

Similar News