சீர்காழி இட்டை காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- சீர்காழியில் இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
- விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.
சீர்காழி:
சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவில் சென்றடைந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து மாலை பச்சகாளி, பவளக்காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.