தேனியில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் ஒத்திகை
- தேனியில் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பில் பேரிடர் ஒத்திகை பார்க்கப்பட்டது
- தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த தீயணைப்பு-மீட்புப்பணி நிலையங்களில் வெள்ள மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு – மீட்புப்பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் பாதுகாத்து கொள்வது குறித்து பேரிடர் கால மீட்பு ஒத்திகை பயிற்சி கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
பேரிடர்களின் தாக்கத்தி லிருந்து பொது மக்களை பாதுகாக்கும் பணியில் திட்டமிட்டு விரைவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொ ள்வதற்காக பேரிடர் மேலாண்மைக்குழு அமை க்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது காற்றினால் ஏற்பட க்கூடிய திடீர் வெள்ள ப்பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர் நிகழ்வு களின் போது அரசு அலுவல ர்கள், பணியாள ர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாது காத்து கொள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது.
தேனி மாவட்ட தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையில் நீச்சல் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்ற 22 படை வீரர்கள் 24 மணி நேரமும் மீட்பு பணிக்கு சேவை புரியதக்க வகையில் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
மேலும், தேனி மாவட்ட த்தைச் சேர்ந்த 9 தீயணைப்பு-மீட்புப்பணி நிலையங்களில் நீச்சல் வீரர்கள் மற்றும் வெள்ள மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது. இப்பயிற்சியினை பின்பற்றி, பேரிடர் நிகழ்வுகளின் போது அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்க ளையும், பொதுமக்களையும் பாதுகாத்திட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், வட்டாட்சி யர் (பேரிடர் மேலாண்மை) ஆர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.