பண்ருட்டி அருகே 15- ம் நூற்றாண்டு சப்தமாதர்கள் சிற்பம் கண்டெடுப்பு
- கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது.
- 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர்.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த பைத்தாம்பாடி சத்திரம் ஊரில் தென்பெண்ணை கரையோரம் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மொச காத்தம்மன் கோவில் கட்டு வதற்காக மண் எடுத்த போது மண்ணுக்கடியில் 3 கற்சிற்பங்கள் கிடைத்தது. இது குறித்து விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரியில் முதுகலை வரலாறு படிக்கின்ற மாண வர்கள் குமரகுரு மற்றும் சூர்யா ஆகியோர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசி ரியர் ரமேஷ் மற்றும் தொல்லியல் மற்றும் முனை வர் பட்டம் ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோ ருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த ஆய்வார்கள் இம்மானுவேல் மற்றும் ரமேஷ் ஆகியோர் அங்கே இருந்த கற்சிற்பத்தை ஆய்வு செய்து அவை 15-ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்களின் சிற்பம் என தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது :-
சப்தமாதர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்தி ராணி, சாமுண்டி, போன்ற வராவார், சப்தமாதர்க ளுக்கு தொடக்க காலத் தில் படிமங்கள் ஏதும் உரு வாக்கப்படாமல் 7 கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கி னார். முற்கால சோழர்கள் தாங்கள் எடுத்த சிவாலயங்களில் அஷ்ட பரிவார தெய்வங்கள் என்று பெயரிட்டு சூரியன், சந்திரன், சப்தமாதர்கள், கணபதி, முருகன், மூத்ததேவி, சண்டிகேஸ்வரர், பைரவர் என அனைவருக்கும் திரு உருவம் செய்து தேவ கோட்டத்தில் (கருவரை சுவற்றில்) அமைத்தனர், சோழர்கள் தாங்கள் எடுத்த கோவில்களில் அனைத்தி லும் சப்தமாதர்களுக்கு திரு மேனி எடுத்து சிறப்பித்தனர்.
பைத்தாம்பாடி சத்திரம் பகுதியில் கண்டெடுத்த சப்தமாதர்கள் மகேஷ்வரி, பிராமி, மற்றொரு சிற்பம் முகம் முற்றுபெறாத நிலை யில் அடையாளம் காண முடியாமல் உள்ளது. மகேஷ்வரி, பிராமி சிற்பங்கள் அவரவர்களுக்கு ரிய ஆயுதங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சி யளிக்கிறார்கள்.கண்டெ டுத்த சிற்பங்கள் கை, முகம் போன்றவை சிறிது சிதைந்த நிலையில் உள்ளது. இங்கே இருக்கின்ற சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதி யில் சப்தமாதர்கள் கோயில் இருந்திருக்கலாம் என அறியமுடிகிறது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு பறைசாற்றும் அடையாளமாக விளங்கிக் கொண்டி ருக்கும் இந்த வரலாற்று கலைச்செல்வங் களை பாதுகாப்பது நம் கடமையாகும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.