- பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்துள்ளது.
- சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் சோழ அய்யனார் கோவில் பின்புறம் கற்சிலைகள் இருப்பதாக திட்டச்சேரி போலீ சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் அம்மன் சிலைகள் 2ம் இருந்துள்ளது.
அதனை கைப்பற்றிய திட்டச்சேரி போலீசார் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நாளை நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.
கற்சிலைகளை யார் இங்கு கொண்டு வந்தது. எதற்காக கோவிலின் பின்புறம் வைத்து சென்றனர். மற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.