உள்ளூர் செய்திகள் (District)

காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Published On 2023-05-07 09:13 GMT   |   Update On 2023-05-07 09:13 GMT
  • முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.
  • 67,470 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட மேலாண்மை அலகு சார்பாக முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள 133 பள்ளிகளில் 7 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஊரக பகுதிகளில் 1217 பள்ளிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 35 பள்ளிகளிலும் என மொத்தம் 1252 பள்ளிகளில் உள்ள 67,470 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் முதல் கட்டமாக வருகிற ஜூன்மாதம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, கெலமங்கலம் மற்றும் தளி ஒன்றியம், பேரூராட்சிகளிலும், இரண்டாம் கட்டமாக வருகிற ஜூலை மாதம் ஊத்தங்கரை, மத்தூர், காவேரிப்பட்டணம் மற்றும் ஓசூர் ஒன்றியம், பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.

இந்த கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநருமான வந்தனா கார்க், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் ஜாகீர்உசேன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சந்தானம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) பிரபாகர் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News