உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற சிவலூர் அணிக்கு பரிசு வழங்கிய காட்சி.

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி - உடன்குடி சிவலூர் அணி சாதனை

Published On 2023-07-25 08:54 GMT   |   Update On 2023-07-25 08:54 GMT
  • போட்டியில் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 29 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
  • பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவலூர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் விஜயன் தலைமை தாங்கினார்.

உடன்குடி:

முன்னாள் முதல்- அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு உடன்குடி சிவலூர் சிதம்பரேஸ்வர் மைதானத்தில் சிவலூர் கிரிக்கெட் குழு சார்பாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் 4 நாட்கள் நடந்தது. இதில் திருச்செந்தூர், காயல்பட்டினம், சாத்தான்குளம் ,காயாமொழி உட்பட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 29 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

இறுதி போட்டியில் சிவலூர் அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. காயாமொழி 2-வது இடத்தையும், காயல்பட்டினம் அணி 3-வது இடத்தையும், நயினார்பத்து அணி 4-வது இடத்தையும் பெற்றன.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிவலூர் காமராஜர் நற்பணி மன்ற தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெயராஜ், பட்டுராஜ், சிவலூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செட்டியாபத்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வகுமார், திருச்செந்தூர் கீர்த்தி வாசன், தொழிலதிபர் விஜயந்த்ராஜ், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் முகமது ஆபித், சிவகுமார், அரவிந்த், செந்தில்குமார், பொறியாளர் அஸ்வின், அஜித் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசுகளை வழங்கினர்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சுதனேஷ் குமார், தங்கவிக்ரம், புவன் கவுசிக், அசோக் தவபாலன் உள்ளிட்ட சிவலூர் கிரிக்கெட் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News