உள்ளூர் செய்திகள் (District)

மீஞ்சூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

Published On 2023-01-12 09:23 GMT   |   Update On 2023-01-12 09:23 GMT
  • மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.
  • ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

பொன்னேரி:

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 2012-ம் ஆண்டு அம்மா சிமெண்ட் கிடங்கு கண்காணிப்பு ஊழியராக நியமனம் செய்யப்பட்ட வரை நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர் சுமித்ரா குமார் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினார். இதனால் தி.மு.க. உறுப்பினர்களுக்கும் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் தலையிட்டு புதிய ஊழியர் நியமனம் தொடர்பாக விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் பானு பிரசாத், கிருஷ்ண பிரியா வினோத், வெற்றி, தமின்சா, சகாதேவன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News