ஆலங்குளம் அருகே லாரி டயரில் சிக்கி டிரைவர் பலி
- சாலைக்கு சற்று தொலைவில் ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கிய நிலையில் லாரி நின்றுள்ளது.
- லாரி ‘பிரேக்’ பிடிக்காததால் ரமேஷ் லாரியிலிருந்து கீழே குதித்துள்ளார்.
ஆலங்குளம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முகத்தலா அருகே உள்ள பெரும்பாலத்து புத்தன் வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). லாரி டிரைவர். நேற்று தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங் குறிச்சியில் செயல்பட்டு வரும் ஒரு எம்.சாண்ட் குவாரிக்கு லாரி ஓட்டி வந்த ரமேஷ் லாரியை குவாரிக்கு வெளியே நிறுத்த சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் லாரியின் டிரைவர் வராத தால் அந்த வண்டியில் கிளீனர் ஆக இருந்த கொல்லத்தை சேர்ந்த ஏசு தாஸ் என்பவர் கிரசருக்கு வெளியே சென்று பார்த்துள்ளார். அப்போது சாலைக்கு சற்று தொலைவில் ஒரு சிறிய பள்ளத்தில் இறங்கிய நிலையில் லாரி நின்றுள்ளது. உடனே அங்கு சென்று பார்த்த போது ரமேஷ் லாரி டயர் ஏறி இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
லாரி 'பிரேக்' பிடிக்காமல் பள்ளத்தில் இறங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் லாரியிலிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அங்கிருந்த இரும்பு வலையில் விழுந்து லாரியின் பின்பக்க டயரில் சிக்கி அவர் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரமேஷ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். உயிரிழந்த ரமேசுக்கு திருமண மாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.