உள்ளூர் செய்திகள் (District)

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இரு மாநில போலீஸ் அதிகாரிகள்.

போதைப்பொருள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் சோதனையை கடுமையாக்க முடிவு

Published On 2022-10-08 04:05 GMT   |   Update On 2022-10-08 04:05 GMT
  • தமிழக - கேரள எல்லையான குமுளி வழியே அடிக்கடி போதைப்பொருள் கடத்தப்பட்டுவதை தடுப்பதற்காக இரு மாநில காவல் துறை சார்பில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • வாகன சோதனைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடலூர்:

தமிழக - கேரள எல்லையான குமுளி வழியே அடிக்கடி போதைப்பொருள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்காக இரு மாநில காவல் துறை சார்பில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரே, இடுக்கி மாவட்ட எஸ்.பி. சூரிய கோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். உத்தமபாளையம் ஏ.எஸ்.பி. ஸ்ரேயா குப்தா, மது விலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி. சுரேஷ், பீர் ேமடு டி.எஸ்.பி. குரியா கோஸ், இடுக்கி தனிப்பிரிவு டி.எஸ்.பி. ஜார்ஜ், போதைப்பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. மேத்யூ மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து கடத்தி வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எல்லை வழியாக நடைபெறும் கஞ்சா கடத்தலை தடுப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். கேரளாவில் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டாலும் அதனை விற்பவர்கள் தமிழகத்தில்தான் இருக்கின்றனர்.

எனவே ஒரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதால் இந்த குற்றம் தொடர்ந்து கொண்டே உள்ளது. எனவே தொடர்புடைய போதை வழக்கு விபரங்களை இரு மாநில போலீசாரும் பரிமாறிக் கொள்ள வேண்டும். இதற்காக தமிழக, கேரள போலீசார் இணைந்து செயல்பட்டு போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் ஒழிக்க வேண்டும். வாகன சோதனைகளை மேலும் தீவிரபடுத்த வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News