உள்ளூர் செய்திகள் (District)

முகாமில் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி கல்வி கடன் உதவிகளை வழங்கிய காட்சி.

தருமபுரியில் நடைபெற்ற முகாமில் 93 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10.83 கோடி கல்விக்கடன்

Published On 2023-11-18 09:58 GMT   |   Update On 2023-11-18 09:58 GMT
  • ரூ. 261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்ப ட்டுள்ளது.
  • இணைய தளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் பிற மாவட்டங்களை ஒப்பிடும் பொழுது கல்விக்கடன் வழங்கப்பட்டு வரும் சதவீதம் மிக குறைந்த அளவில் இருக்கிறது. இதனை அதிகரிக்கும் வகையிலும் பயனடையும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையிலும் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு முன்னெ டுப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தி வருகின்றது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வரை 11.625 நபர்களுக்கு ரூ. 261.90 கோடி மதிப்பீட்டில் கல்விக்கடன் வழங்கப்ப ட்டுள்ளது. இன்றையை தினம் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முலாமில் 93 மாணவ, மாணவியர்களுக்கு ரூ. 10.83 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு வங்கிகள் மூலம் 2023 - 2024 ஆண்டில் இதுநாள் வரை மொத்தம் 370 மாணவ மாணவியர்களுக்கு ரூ. 23. 13 கோடி கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில் 5, 000 மாணவ. மாணவியர்களுக்கு கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www. vidyalak shmi. co. in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளையை தொடர்பு கொள்ள வேண்டும் ஆவணங்களை கொடுத்து முறையாக விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News