உள்ளூர் செய்திகள்

கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி தேவை அதிகரிப்பு- முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Published On 2022-12-22 05:46 GMT   |   Update On 2022-12-22 05:46 GMT
  • கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது.
  • ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

நாமக்கல்:

நாமக்கலில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து 530 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை பத்து காசுகள் உயர்த்தி 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பதற்கு அதிக அளவில் முட்டை பயன்படுத்துவதால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

நாமக்கலில் நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.111-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை, ரூ.2 உயர்த்தி ஒரு கிலோ ரூ.113 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News