உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்

மின் தடையால் இருளில் மூழ்கிய மலை கிராமங்கள்

Published On 2022-06-05 05:03 GMT   |   Update On 2022-06-05 05:03 GMT
கொடைக்கானல் கீழ்மலையில் மலைக்கிராமங்களில் தொடந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்

பெரும்பாறை :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியில் குப்பம்மாள்பட்டி, வழிபொங்கல், ஏ.பி.நகர், கோரம்கொம்பு, வேங்கடி ஏற்றம், வெட்டுக்காடு, கள்ளக்கிணறு, கவியகாடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலைக்கிரா–மங்களில் தொடந்து மின்தடை ஏற்படுகிறது. இதனால் மலைக்கிராமங்கள் இரவில் இருளில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.

இதனால் இரவு நேரத்தில் வீட்டை, விட்டு பொதுமக்கள், விவசாயிகள் வெளியில் வரமுடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தாண்டிக்குடி துணை மின் நிலையத்துக்கு மலைக்கிராம மக்கள் பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே மலைக்கிரா–மங்களில் சீரான மின்சாரம் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News