உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 23 நாட்களில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2022-06-30 09:38 GMT   |   Update On 2022-06-30 09:38 GMT
  • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 993 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது மாவட்ட–த்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும் பொதுமக்கள் இன்னமும் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.

இதேபோல் மாவட்ட–த்தில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணி–க்கை–யை மேலும் அதிகப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News