உள்ளூர் செய்திகள்

காவிரி ஆற்றங்கரையோரத்தில் இருந்த ௧௪ ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

Published On 2022-11-02 09:13 GMT   |   Update On 2022-11-02 09:13 GMT
  • காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.
  • அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.

கொடுமுடி:

ஈேராடு மாவட்டம் கொடுமுடியில் புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.

இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்னர் ஆற்றோரம் உள்ள பரிகார கடைகளில் பரிகாரம் செய்து விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.

இதையடுத்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் யாரும் கடையை அகற்ற வில்லை.

இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் கொடுமுடி காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் எங்கள் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்றனர். ஆனால் தேவையான அனுமதி கொடுத்து விட்டோம் என்று கூறிவிட்டனர்.

கடைகள் இடித்து அகற்றப்படுவதை பார்த்து ஒரு சில வியாபாரிகள் கதறி அழுதனர். ஆனாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு பதட்டமான நிலை உருவாகி உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News