உள்ளூர் செய்திகள்

சித்த மருந்து பெட்டகம் 263 அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

Published On 2023-04-09 09:35 GMT   |   Update On 2023-04-09 09:40 GMT
  • மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
  • 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், அரசின் மகப்பேறு சிரஞ்சீவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசின் மகப்பேறு சஞ்சீவி திட்டம் மூலம் சித்த மருத்துவ பெட்டகம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.

தாய், சேய் இறப்பு விகிதம் குறைக்க, கர்ப்பிணி தாய்மார்களின் ரத்த சோகை தடுக்க சித்த மருந்துகள் வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் தாளவாடி, பர்கூர் மலைவாழ் மக்களுக்கும் ரத்த சோகை தடுப்பு சித்த மருந்துகள் ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4094 பேர் பயனடைந்துள்ளனர். அங்கன்வாடி குழந்தை களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் சித்த மருத்து பெட்டகம் 263 குழந்தை களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சையின் மூலம் இதுவரை 23,876 பேர் பயன் அடைந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் தொற்றா நோய் களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்க ளுக்கு ஆயுஷ் சிகிச்சை அளிக்கப்பட்டு 2,487 நோயாளிகள் பயனடை ந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்காலத்தில் சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 699 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு எவ்வித மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வீடுகளுக்கு சென்று நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற மருந்துகள் வழங்கும் திட்டம் மாநிலத்தில் முதல் முதலாக நம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

இதன் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News