உள்ளூர் செய்திகள்

தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Published On 2022-10-18 09:42 GMT   |   Update On 2022-10-18 09:42 GMT
  • பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர்.

பவானி:

பவானி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியில் பவானி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இருந்த மணி என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 3.264 கிலோ எடை கொண்ட ரூ.2496 மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை வஸ்து பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பவானி போலீசார் பவானி தாசில்தாருக்கு டீக்கடைக்கு சீல் வைக்க கோரி தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பவானி தாசில்தார் ரவிச்சந்திரன் உத்தரவுப்படி வருவாய் அலுவலர் விஜய கோகுல், வி.ஏ.ஓ. குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் டீக்கடைக்கு வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக பவானி சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஸ் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (46) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னப் பருவாச்சிபகுதி கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்ததில் 10 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் சதாசிவம் (49) என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் பருவாச்சி பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்து சதாசிவம் உடன் பருவாச்சிஅண்ணா நகர் பகுதியில் சோதனை செய்தனர்.

அங்கு ஏராளமான போதை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த விருதுநகர் ஈரெட்டிப்பட்டியை சேர்ந்த காளிராஜ் (24) என்பவரையும் கைது செய்தனர். இந்த குட்காவின் மதிப்பு 39 ஆயிரம் 500 ரூபாய் ஆகும்.

Tags:    

Similar News