உள்ளூர் செய்திகள்
பவானி செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
- பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
பவானி:
பவானி செல்லாண்டி யம்மன், மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா செல்லியாண்டி அம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்களில் உள்ள மூலவருக்கு பால், தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
இதனையடுத்து வருகின்ற 21-ந் தேதி கம்பம் நடப்பட்டு பின்னர் மார்ச் மாதம் 1-ந் தேதி மாசி திருவிழா, பொங்கல் விழா நடைபெற உள்ளது.
இதில் பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.