ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
- ஒப்பந்த தொழி லாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
- 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
பெருந்துறை,
பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஒப்பந்த தொழி லாளர்கள் கடந்த 4 நாட்களாக ஊதிய உயர்வு, வேலை நேர மாற்றம் மற்றும் வார விடுமுறை, சம்பளம், போனஸ் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கல்லூரி யில் உள்ள அவர்களது மேலாளர் தலைமை மற்றும் கல்லூரி நிர்வாகிகளும் தொடர்பு கொண்டு பேசினர். இதில் அவர்களு க்குள் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து 4 நாட்களாக நடந்து வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதில் தொழிலாள ர்களின் வேலை நேரம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் மாலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக பணி யாளர்கள் வேலைக்கு வர முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறை அதிக மாக உள்ளதால் தேவையான ஊழியர்களை மீண்டும் நியமித்த பின்பு வார விடுமுறை விரைவில் அறி விக்கப்படும் என தெரிவிக்க ப்பட்டது.
சம்பளம் மற்றும் போனஸ் தொடர்பாக வரும் 13-ந் தேதி சென்னை யில் மேலாளர் தலைமையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
அதில் ஏற்படும் முடி வைக் கொண்டு மறு பரிசீலனை செய்யப்படும் என தொழிலாளர்கள் தெரி வித்தனர்.
தற்போது 4 நாட்களாக நடைபெற்று வந்த தொழி லாளர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இன்று காலை முதல் அனைத்து துப்புரவு தொழிலாளர்களும் பணிக்கு சென்றனர்.