உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில்  குப்பை வரிைய நீக்க வலியுறுத்தி மேயரிடம் கவுன்சிலர்கள் மனு

Published On 2023-07-31 09:00 GMT   |   Update On 2023-07-31 09:00 GMT
  • ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில்  குப்பை வரிைய நீக்க வலியுறுத்தி மேயரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்
  • மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் இன்று மாநகராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. மேயர் நாகரத்தினம் சுப்பிர மணி தலைமை தாங்கினார். துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகி யோர் முன்னிலை வைத்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளை விளக்கி கூறினார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி சம்பந்தமான வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக 23 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்ச னைகள் குறித்து விரிவாக பேசினர். அப்போது 40-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ் குமார் பேசும்போது, 40 -வது வார்டில் வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த பாரதியார் நூலகம் உள்ளது. நூற்றாண்டு கண்ட நூலகம். இதில் தான் மகாகவி பாரதியார் 1921 -ம் ஆண்டு மனிதனுக்கு மரணமில்லை என்ற தலைப்பில் தனது இறுதி உரை ஆற்றினார். இந்த சிறப்புமிக்க நூல கத்தில் அருங்காட்சியகமும் உள்ளது. இந்த சிறப்புமிக்க நூலகம் நீண்ட நாட்களாக சிதிலடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதை நிர்வாகிப்பது பராமரிப்பது பொது பணி துறை. இது குறித்து அவர்களிடம் பல முறை முறையிட்டும் கடிதம் கொடுத்தும் பயன் இல்லை. இந்த நூலகத்தை மாநகரா ட்சியே நிர்வாகிக்க வேண்டும் என 2-வது முறையாக கோரிக்கை வைக்கிறேன் என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா சாதிக் கூறும்போது, எனது வார்டில் உள்ள குந்தவை வீதியில் உள்ள ரோடு மிகவும் குண்டு குழியுமாக மோசமாக உள்ளது. அந்த ரோட்டை உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து மாநகராட்சியில் உள்ள அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து மாநகராட்சி யில் விதிக்கப்பட்டுள்ள குப்பை வரிகளை நீக்க வலியுறுத்தி மேயர் நாக ரத்தினத்திடம் மனுக்கள் கொடுத்தனர். 

Tags:    

Similar News