உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் மூலிகை தோட்டம்

Published On 2023-09-20 09:57 GMT   |   Update On 2023-09-20 09:57 GMT
  • பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.
  • 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 ஈரோடு:

பள்ளிகளில் மரக்க ன்றுகள் நடுதல், மூலிகை தோட்டங்கள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைக ளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பா ண்டில் மட்டும் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் பள்ளிகல்வி த்துறை சார்பில் இந்தாண்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 லட்சம் மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவர்க ளுக்கு இயற்கை மீதான பற்றினை உருவாக்கவும், மூலிகை தாவரங்கள் குறி த்தும், அதன் பயன்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை தாவரத்தின் பெயர், பயன்கள், அவற்றை பராமரிக்கும் முறைகளை எடுத்துக்கூறும் வகையில் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க அரசு திட்டமிப்பட்டுள்ளது.

தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அமைக்கப்படும் இந்த மூலிகை தோட்டத்தை தொண்டு சம்மந்தப்பட்ட தொண்டு நிறுவனம் 3 ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உள்ளது.

12 சென்ட் காலி இடம், சுற்றுச்சுவர் வசதி, தண்ணீர் வசதி உள்ள அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் மூலிகை தோ ட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் காலி இடம் இல்லாவிட்டாலும், மாடியில் இடமிருந்தாலும் மூலிகை தோட்டம் அமைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News