காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
- பொங்கல் திருவிழாயொட்டி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
- தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி ஈரோடு ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் ஆடி மாதம் பொங்கல் திருவிழாயொட்டி கடந்த 3-ந் தேதி கணபதி பூஜை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணி அளவில் சங்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் பொங்கல் வைத்தலும், 8 மணிக்கு மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருகிற நிகழ்ச்சியும் நடைபெற்றது.
12 மணி அளவில் காமாட்சி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து மகா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம் தாலிச் சரடு வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.
விழாவில் ஈரோடு, பவானி, அந்தியூர், கணக்கம்பாளையம், கோபி, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான கலந்து கொண்டு காமாட்சி அம்மனின் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தார்கள்.