ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மனு
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் மனு அளித்தனர்
- எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற கால தாமதம் ஏற்பட்டால் தீர்வு கிடைக்கும் வரை சென்னை யில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
ஈரோடு-
ஈரோடு மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. அப்போது தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிறப்பாசி ரியர்கள் வந்தனர். தொட ர்ந்து அவர்கள் கோரி க்கைகள் வலியுறுத்தி கோஷ மிட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் அரசு கொடுத்த வாக்குறு திகளை நிறைவேற்ற கோரி யும் பகுதி நேர சிறப்பு ஆசிரி யர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் ஒரு மனு கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிரு ப்பதாவது:- அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் முறையாக நியமனம் செய்யப்பட்டு ரூ.10 ஆயிரம் தொகுப்பூதிய த்தில் பணியாற்றி வரு கிறோம். கடந்த 13 ஆண்டு களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பல முறை கோரிக்கை, உண்ணா விரதம், மற்றும் போராட்ட ங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் கோரிக்கைகள் போராட்டம் மற்றும் அதி காரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எனவே எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரி க்கைகள் நிறைவேற்ற கால தாமதம் ஏற்பட்டால் தீர்வு கிடைக்கும் வரை சென்னை யில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.