ஒரே வழித்தடத்தில் இயங்கும் 2 அரசு பஸ் இயங்காததால் பொதுமக்கள் தவிப்பு
- இன்று ஒரே வழித்தடத்தில் இயங்கக்கூடிய 2 நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.
- பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனை யில் தினமும் 82 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நகர புற பஸ்கள் 23, புறநகர் பஸ்கள் 59 இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஒரே வழி த்தடத்தில் இயங்கக்கூடிய கே.3, பி.13 என்ற நகரப்புற பஸ்கள் இயங்கவில்லை.
இந்த பஸ் கோவிலூர், எண்ணமங்கலம், கவுந்தப்பாடி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும்.
இந்த நிலையில் 2 பஸ்களும் காலை முதல் இயங்காதால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் மட்டும் அடிக்கடி பஸ் நிறுத்தப்படுவதால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் முக்கிய நாட்களில், விசேஷ நாட்களில் இது போன்று பஸ்கள் வராமல் செய்வது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
இது குறித்து கிளை மேலாளர் தெரிவிக்கையில், அந்தியூர் அரசு பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.