உள்ளூர் செய்திகள்

தலைமறைவான மேலும் 4 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்

Published On 2023-05-29 06:15 GMT   |   Update On 2023-05-29 06:15 GMT
  • காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
  • காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர்.

சென்னிமலை, 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியில் ஈங்கூர் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது. கடந்த 23-ந் தேதி மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி (47) என்பவர் பாலப்பாளையம் பிரிவு கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு ரூ.23 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாலப்பா ளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது வேறு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சத்திய மூர்த்தியை வழிமறித்து காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியை காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செ ன்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு கேமரா க்களையும் ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா, கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29) என்பதும், மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது. இதில் மனோகர் கடந்த 8 வருடங்களாக சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மற்றொருவரான நவநீதன் என்பவரும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்து பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அந்த நிறுவனத்தில் தினமும் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்று வந்ததை மனோகர் கண்கா ணித்து ள்ளார். இது பற்றி தனது நண்பர் நவநீதனுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவலை மனோகரும், நவநீதனும் தங்களது உறவி னர்களுக்கு தெரிவித்து ள்ளனர். அவர்கள் இந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

அதைத்தொடர்ந்து மனோகர் மற்றும் நவநீத னின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்கா ணித்து அவர் வரும்போது காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளை போன தற்கு உடந்தையாக இருந்த மனோகர் மற்றும் நவநீதனை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மற்றும் நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளை யடித்து சென்ற தலை மறைவான 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News