உள்ளூர் செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 397 ஆக உயர்வு

Published On 2022-07-28 10:33 GMT   |   Update On 2022-07-28 10:33 GMT
  • ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
  • இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 33 ஆயிரத்து 941 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சையில் இருந்த 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 810 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 397 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாவட்டத்தில் 500 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 10.5 சதவீதம் பாதிப்பு ஆகும்.

Tags:    

Similar News