ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை
- சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
- தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தினசரி பாதிப்பு அதிக அளவில் இருந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்ப ட்டதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டு ள்ள பட்டியல் படி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 646 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர் களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 897 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 15 பேர் மட்டுமே கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.