பவானிசாகர், கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
- இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது கொடிவேரி அணை.இதே போல் சிறந்த பரிகார தலமாக உள்ளது பவானி கூடுதுறை.
கொடிவேரி அணையில் இருந்து விழும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களை சுடச்சுட வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
இதேபோல் பவானிசாகர் அணை பூங்காவுக்கும் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணையின் அழகை கண்டு ரசித்தனர்.
இதேபோல் பண்ணாரியம்மன் கோவிலுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்திருந்தனர்.மேலும் திம்பம், தாளவாடி, பர்கூர் மலைபகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள்கண்டு ரசித்தனர்.
இதேபோல பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கூடுதுறையில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.
இதேபோல் வெளியூர்களில் இருந்தும்ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும்,தர்ப்பணம் செய்தும் சங்கமேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.