உள்ளூர் செய்திகள்

முன்னாள் படை வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் மனுக்கள் வழங்கினர்.

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவு

Published On 2022-08-29 09:24 GMT   |   Update On 2022-08-29 09:24 GMT
  • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
  • மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஈரோடு:

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கினர்.

இதில் 11 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திருமண மானியம், கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி மானியம் என 8 முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்களுக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பில் மானியத்தொகைக்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுஇயக்குநர் மணிவண்ணண் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News