உள்ளூர் செய்திகள் (District)

மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

பாலக்கோடு அருகே கைதான போலி டாக்டர் சிறையில் அடைப்பு

Published On 2023-04-29 09:52 GMT   |   Update On 2023-04-29 09:52 GMT
  • 12ம் வகுப்பு படித்துவிட்டு மெடிக்கல் ஸ்டோரில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
  • அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளான சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் வந்தது.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம் தலைமையிலான குழுவினர், சர்க்கரை ஆலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஊத்தங்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 48) என்பவர் 12-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கடந்த 15 ஆண்டுகளாக மெடிக்கல் ஸ்டோரில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும், அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளான வயகரா, சில்டினாபில், நிமுஸ்லைட் உள்ளிட்ட மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்த குளுக்கோஸ்பாட்டில்கள், ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News