2-வது திருமணம் செய்த விவசாயியை தாக்கி நகை பறித்த கும்பல்
- 2-வது திருமணம் செய்ததால் விவசாயியை தாக்கி நகை பறிக்கப்பட்டது
- இதில் காயம் அடைந்த விவசாயி தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார்
தேனி:
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் கருப்பசாமி கோவில் தெரு அம்பேத்கார் காலனியைச் சேர்ந்தவர் முத்து சுயம்புராஜா (வயது 51). இவர் அழகாபுரி - பூமலைக்குண்டு ரோடு அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முதல் மகளுக்கு திருமணம் நடத்தி முடித்து 2வது மகளுக்கு நிச்சய தார்த்தம் செய்துள்ளார்.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் வேறு ஒரு பெண்ணை தனது உறவி னர்களுக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டார்.
சம்பவத்தன்று முத்து சுயம்புராஜா மற்றும் அவரது 2-வது மனைவி சசிகலா கோழிப்பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த உறவினர்களான மதுரையைச் சேர்ந்த செல்வம், காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ெசல்வபாண்டி ஆகியோர் முத்து சுயம்பு ராஜாவை செருப்பால் அடித்து தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் மற்றும் மோதிரம், மோட்டார் சைக்கிள் சாவி ஆகியவற்றை பறித்து எடுத்து சென்று விட்டனர்.
படுகாயமடைந்த முத்து சுயம்புராஜா தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.
இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமார் விவசாயியை தாக்கிய செல்வம் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.