விவசாய நிலங்களில் அட்டகாசம் காட்டுயானை தாக்கி விவசாயி, கன்றுகுட்டி பலி
- வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- யானை தாக்கியதில் விவசாயி மற்றும் கன்றுகுட்டி பலியானது
ஒட்டன்சத்திரம்:
பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பழனி அருகே சிந்தல வாடம்பட்டி, ராமபட்டி ணம்புதூரை சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார். இந்தோட்டத்தில் திடீரென காட்டுயானை புகுந்து தண்டபாணியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ேதாட்டத்தில் கன்றுகுட்டி கட்டப்பட்டி ருந்தது. வனப்பகுதியில் இருந்து வழி மாறி வந்த காட்டுயானை தோட்டத்தி ற்குள் புகுந்தது.
அங்கிருந்த கன்று குட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அது பலியானது. தகவல் அறிந்து வந்த கால்நடை டாக்டர் கன்றுகுட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் தோட்டத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை நட மாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.