உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலிஉடலை நிலத்தில் தூக்கி வீசிய உறவினர்

Published On 2023-04-01 10:17 GMT   |   Update On 2023-04-01 10:17 GMT
  • ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார்
  • இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் கள்ளிப்பட்டு அருகே சின்னமடம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 55). விவசாயியான இவர் இன்று அதிகாலை தனது நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றார். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினராக பிரபுவின் நிலத்தை கடந்து தான் ராமதாசின் நிலத்திற்கு செல்லவேண்டும்   இந்த பகுதியில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதால், பிரபு தனது நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலியில் எதிர்பாராத விதமாக சிக்கிய ராமதாஸ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த பிரபு, ராமதாஸ் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராமதாசின் உடலை அவரது நிலத்திற்கு கொண்டு சென்று போட்டுள்ளார். பின்னர் ஊருக்குள் வந்து ராமதாஸ் நிலத்தில் இறந்து கிடப்பதாக கூறினார்.

உடனடியாக அங்கு விரைந்த கிராம மக்கள் ராமதாஸ் மின்வேலியில் சிக்கி இறந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து வளவனூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்   தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ராமதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ம் இது தொடர்பான புகாரின் பேரில் பிரபுவை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளை நிலங்களில் மின் வேலி அமைக்க கூடாது என்றும். அவ்வாறு இருந்தால் அதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விழுப்புரம் கலெக்டர் பழனி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.Electric fence

Tags:    

Similar News