உள்ளூர் செய்திகள்

நெல் அறுவடைக்கு பின் பயறு சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

Published On 2023-01-09 09:13 GMT   |   Update On 2023-01-09 09:13 GMT
  • குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை சாகுபடி அவசியம்.
  • நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்:

தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் பகுதியில் வேளாண் விளை நிலங்களில் மண்வளத்தை அதிகரித்திடவும் குறைந்த காலத்தில் கூடுதல் வருமானம் ஈட்டிடவும் பயறு வகை பயிர்கள் சாகுபடி அவசியமாகும்.

சம்பா நெல் அறுவடைக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய ஏதுவாக தலைஞாயிறு வட்டாரத்திற்குட்பட்ட தலைஞாயிறு, நீர்முளை, பனங்காடி மற்றும் கொத்தங்குடி ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் தரிசுக்கு ஏற்ற பயறு ரகங்கள் 8 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

எனவே தேவைப்படும் விவசாயிகள் கிலோ ரூ. 118 என்பதில் இருந்து மானிய தொகை ரூ. 48 கழித்து ரூ. 70 விலையில் பயறு விதைகளை பெற்று பயனடையலாம். மேலும், நெல்லுக்கு பின் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்து மண்வளத்தை பெருக்கிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News