உள்ளூர் செய்திகள் (District)

காய்ந்த சூரியகாந்தி பூக்களை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த விவசாயிகள்.

தரமற்ற விதைகளால் விளைச்சல் பாதிப்பு காய்ந்த சூரியகாந்தியுடன் விவசாயிகள் கலெக்டரிடம் புகார்

Published On 2022-07-29 08:07 GMT   |   Update On 2022-07-29 08:07 GMT
  • திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். பழனியை சேர்நத விவசாயிகள் காய்ந்த சூரியகாந்தி பூக்களுடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

அவர்கள் தெரிவிக்கையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் எண்ணைய்வித்து பயிராக சூரியகாந்தி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தரமற்ற விதைகளால் பெரும்பாலான தோட்டங்களில் பூக்கள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளில் சென்று கேட்டால் முறையான பதில் அளிப்பதில்லை. எனவே இப்பகுதியில் உள்ள விதை மற்றும் உரக்கடைகளில் அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News