உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புகளை ஏந்தியப்படி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-30 07:49 GMT   |   Update On 2022-12-30 07:49 GMT
  • மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
  • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதில், தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து 31-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், விவசாயிகளின் கோரிக்கை குறித்து இதுவரை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாததை கண்டித்தும், உடனடியாக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் ஏராளமானோர் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தியப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை உடனடியாக சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News