உள்ளூர் செய்திகள்

பூதப்பாண்டி அருகே வீட்டில் பச்சை கிளி வளர்த்தவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

Published On 2023-02-23 06:28 GMT   |   Update On 2023-02-23 06:28 GMT
  • மெய்யல் வீட்டில் இருந்த கிளியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • வனத்துறையினர் தங்களது பாதுகாப்பில் கிளிகளை வைத்து பராமரித்து வருகிறார்கள்.

நாகர்கோவில்:

பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேல புத்தேரி பகுதியில் வசித்து வருபவர் மெய்யல் (வயது 58).

இவர், சட்டவிரோதமாக பச்சை கிளிகள் வளர்த்து வருவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் தலைமையிலான குழுவினர் மெய்யல் வீட்டிற்கு சென்றனர். பின்னர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டார்கள்.

அங்கு இரு கிளிகள் இருந்ததையடுத்து மெய்யலை வனத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மெய்யல் வீட்டில் இருந்த கிளியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் தங்களது பாதுகாப்பில் அந்த கிளிகளை வைத்து பராமரித்து வருகிறார்கள்.

பொதுமக்கள் எவரும் காட்டு பறவையினங்களையோ, காட்டு மிருகங்களையோ வீட்டில் வைத்து வளர்ப்பதை தவிர்க்குமாறும் யாரிடத்திலும் மேலே கூறியது போல் வன உயிரினங்கள் இருப்பின் உடனே அதனை மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் இளையராஜா அறிவுறுத்தியுள்ளார்கள்.

Tags:    

Similar News