உள்ளூர் செய்திகள்
நாகை கருமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
- அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மறைமலை நகரில் உள்ள கருமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
ஆடித்திரு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
வெளிப்பாளையம் ஏழைப்பி ள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு மறைமலைநகர் கருமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்தனர்.
பூச்சொரிதல் விழாவில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்