கட்டுமான ெதாழிலாளர்களுக்கு 3 மாத இலவச திறன் பயிற்சி
- தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் சார்பில் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
- மேலும் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்த, 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
சேலம்:
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாது காப்புத்திட்டம்) சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உள்ள கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார வேலை செய்பவர், குழாய் பொறுத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை போன்ற தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் சார்பில் 3 மாத திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்த, 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு எல் அன்ட் டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். ஒரு வார கால திறன் பயிற்சியில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பங்கேற்கலாம். பயிற்சி பெறுவோருக்கு தினமும் ரூ.800 வழங்கப்படும். இந்த பயிற்சி தொடர்பாக சேலம் கோரிேமட்டில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தை அணுகி பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.