உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2022-12-23 07:34 GMT   |   Update On 2022-12-23 07:34 GMT
  • யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் பள்ளி வளாகத்தில் இலவச கண் மற்றும் பல் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை யங் இண்டியா பப்ளிக் பள்ளி நிர்வாகம், திருப்பூர் தி ஐ பவுண்டேசன்,மலர் பல் மருத்துவமனை இணைந்து நடத்தியது. யங் இண்டியா பப்ளிக் பள்ளி செயலர் டி.சிவசண்முகம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமிற்கு யங் இண்டியா பப்ளிக் பள்ளியின் முதல்வர் கே.அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த முகாமில் திருப்பூர் தி ஐ பவுண்டேஷனைச் சேர்ந்த டாக்டர் .வர்ஷா,சரவணகுமார், மற்றும் மலர் பல் மருத்துவமனையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர். நவமணி ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.இம்முகாமில் சுமார் 600 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தேவைப்படுவோருக்கு உயர்சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.பள்ளி துணைமுதல்வர்கள் சசிகலா மற்றும் நிஜிலாபானு ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News