- வாசுதேவநல்லூரில் இயற்கை மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- ரத்தினபிரகாஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர், எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சேனைத்தலைவர் மண்டபத்தில் இயற்கை மருத்துவ ஆலோசனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன். சேனைத்தலைவர் சமுதாய பொறுப்பாளரான முருகன், ஆறுமுகம் ஆகியோர் முகா மை ெதாடங்கி வைத்தனர்.
மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள் ரத்தினபிரகாஷ், கவிதா, வேடியப்பன் தலை மையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக உடல் பரிசோ தனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் உணவுப்பழக்க வழக்கங்கள், பிசியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளித்து மருத்துவ ஆலோச னைகள் வழங்கப் பட்டது.
ஏற்பாடுகளை சேனைத் தலைவர் இளைஞர் அணி பொறுப்பாளர் முத்து குமார், ஆசிரியர் கோபிகண்ணன் மற்றும் பேரூராட்சி நியமன குழு தலைவர் முனிஸ், பழனிசாமி, ஜெய்பாக்யா, மதன்குமார், இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ ஆரா ய்ச்சி மருத்து வர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.