திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம்; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
- நாளை 3-ந் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
- சிறப்பு பூஜைகள் நடந்து, தொடர்ந்து, பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் புகழ்பெற்ற ஸ்ரீ பிரஹன்னநாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாக விளங்கும் இக்கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 7-ம் தேதி நடக்கிறது.
வருகிற 3-ம் தேதி முதல் கால யாக பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து எட்டு காலை யாக பூஜைகள் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது.
தருமபுரம் ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து மகாபூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது.
வருகிற 5ந் தேதி திருவீதி விநாயகர், தேரடி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், 6ஆம் தேதி தருமை ஆதீனம் ஊருடையப்பர் கோயில், காசி திருமடம் ஸ்ரீ வீரியம்மன், ஸ்ரீ விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் கும்பாபிஷேகமும் வருகிற 7ந் தேதி பிரஹன் நாயகி அம்பிகை சமேத அருண ஜடேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேக பெருவிழாவும் வெகு விமரிசையாக நடக்கிறது.