உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்து ெகாண்டவர்களை முஸ்லிம், கிறிஸ்துவர்கள் திரளாக கூடி வரவேற்றனர்.

பண்ருட்டியில் மதநல்லிணக்கமாக மாறிய விநாயகர் சிலை ஊர்வலம்: முஸ்லிம், கிறிஸ்துவர்கள் திரளாக கூடி வரவேற்பு

Published On 2023-09-21 07:32 GMT   |   Update On 2023-09-21 07:32 GMT
  • பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
  • பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.

கடலூர்:

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழு வதும் வெகு விமரிசையாக நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடை பெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி ராஜாஜி சாலை யில் இருந்து இந்து முன்னணி யினரும், பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ பெரியோர்களை அழைத்து சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரி மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருக்க மதத் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் இளை ஞர்களுக்கு சரியான வழிகாட்டலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறி யிருந்தார். 

இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, இஸ்ஸாமிய, கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பெரியோர்கள் மத நல்லிணக் கத்தை போற்றும் வகையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வந்த இந்து அமைப்பினரை வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.பண்ருட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சி மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என பொது மக்கள் அனைவரும் பாராட்டினர்.

Tags:    

Similar News