மரக்காணத்தில் போலி நகையை அடகுவைத்து ஏமாற்றிய கும்பல் கைதுபோலீசார் தீவிர விசாரணை
- மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாகநடந்து வருகிறது
- 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார்,
விழுப்புரம்:
மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அடகு கடையில் போலி நகைகளை வைத்து பணத்தை கொள்ளையடித்து செல்வது கடந்த ஒரு வருடமாக தொடர்கதையாகி வருகிறது.இதுபோல் போலி நகையை அடகு வைத்து பணம் பறிக்கும் பெண் ஒருவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். மரக்காணம்- புதுவை சாலையில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகை கடையில் கடந்த 6மாதத்திற்கு முன் 10 பவுன் போலி நகையை அடகு வைத்து மர்மப் பெண் ஒருவர் அதற்கான பணத்தை வாங்கி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் அதே கடைக்கு ஒரு கும்பல் சென்று நகையை கொடுத்து பணம் கேட்டுள்ளனர்
.அந்த கடைக்காரர் ஏற்கனவே பல லட்சங்களை இழந்திருந்ததால் மர்ம நபர்கள் கொடுத்த நகையை முறையாக சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் கொடுத்த நகைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அந்த நகைக்கடையின் உரிமையாளர் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக் கும்பலை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த கும்பல் யார் இவர்களுடன் எந்தெந்த கும்பல் தொடர்பில் உள்ளது. இதுபோல் இவர்கள் எந்தெந்த இடங்களில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறித்து சென்றுள்ளனர் என்ற முழு விவரமும் தெரியவரும் என போலீசார் கூறினர்.இதனால் அவர்களடம் போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.