உள்ளூர் செய்திகள்
- கம்பம் வடக்கு போலீசார் கோம்மை சாலை நாககன்னியம்மன்கோவில் அருகே ரோந்து சென்றனர்.
- 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீசார் கோம்மை சாலை நாககன்னியம்மன்கோவில் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு கும்பல் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் விரட்டியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
விசாரணையில் அவர் பாண்டியன்(67) என்பதும் கஞ்சா விற்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விஜயன், ஜெகன்நாதன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.