உள்ளூர் செய்திகள் (District)

பூண்டு விலை உயர்வு

Published On 2023-11-08 09:57 GMT   |   Update On 2023-11-08 09:57 GMT
  • தருமபுரியில் பூண்டு விலை உயர்வு
  • உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவு

தருமபுரி மாவட்டத்தில் பூண்டின் விலை உயர்ந்து வருவதால் பெண்கள் கவலை அடைந்துள்ளனர். சமையலுக்கு இஞ்சி பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி விலை ஏற்றத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்து வருகிறது. உணவு பரிமாறும் போது கண்டிப்பாக மணக்க மணக்க பெண்கள் ரசம் வைப்பார்கள்.

தற்போது பூண்டு விலை உயர்வால் ரசம் வைக்கவே யோசிக்கும் நிலை உருவாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் பூண்டினால் தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சமீப நாட்களாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபா ரிகள் கூறுகின்றனர்.

கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.62 என்ற விலையில் விற்பனை யானது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.72-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது.

ஒரு கிலோ பூண்டு ரூ.198 க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. வெளி மார்க்கெட்டில் ரூ.200 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Similar News