உள்ளூர் செய்திகள் (District)

4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து உலக சாதனை புரிந்த அரசு பள்ளி மாணவிகள்

Published On 2023-11-10 09:31 GMT   |   Update On 2023-11-10 09:32 GMT
  • தருமபுரியில் 4 மணி நேரத்தில் 24 லட்சம் விதைபந்துகள் தயாரித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
  • ஆல், அரசு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் மற்றும் பூவரசு போன்ற விதைகளால் உருவாக்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் தருமபுரி மாவட்டம் குண்டல்பட்டி அருகே உள்ள பச்சமுத்து கல்வி குழுமங்களின் சார்பில் நேற்று மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவிகள் 10 ஆயிரம் போ் இணைந்து 4 மணி நேரத்தில் 25 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

சாதனையை அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட எலைட் வேல்டு ரெக்கார்டு அமைப்பினர் இந்த சாதனையை பதிவு செய்து உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர். இச்சாதனை நிகழ்ச்சியில் பாப்பாரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சினேகா கலந்து கொண்டு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு விதை பந்துகளை தயார் செய்தார். சக மாணவி களோடு தானும் விதை பந்துகளை தயாரித்தது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்.

ஆல், அரசு, அத்தி, மூங்கில், புளி, வில்வம் மற்றும் பூவரசு போன்ற விதைகளால் உருவாக்கப் பட்ட விதைப்பந்துகளை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என கல்வி குழும தலைவா் பாஸ்கா் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Similar News