நிலக்கடலை ஆதார விலை உயர்வு -விவசாயிகள் மகிழ்ச்சி
- நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
- கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.
அவிநாசி :
மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ்பொ ருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குனரகம் செயல்படுகிறது.
இத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ராபி மற்றும் கரீப் பருவத்தில் விளைவிக்கப்பட்டு அரசின் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும். அவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலைக்கு குறைவாக ஏல விற்பனையை அனுமதிக்கக் கூடாது. அதன்படி நிலக்கடலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.5,850 (கிலோவுக்கு, 58.50 ரூபாய்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, சேவூர், உடுமலை, ஈரோடு மாவட்டத்தில் சத்தி, புளியம்பட்டி, நம்பியூர், கோபி, நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள் ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சீசன் துவங்கியுள்ளது.
கடந்தாண்டு நிலக்கடலைக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலைக்கும் அதிகமாகத்தான் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஒப்பிடுகையில், கடந்த, 2018 - 19ல் கிலோவுக்கு ரூ.48.90, 2019-20ல் ரூ.50.90 , 2020-21ல் ரூ.52.75 ,2021-22ல் ரூ. 55.50 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது.